லிட்டருக்கு 27.77 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டாவின் டீசல் சிவிக்!

புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் சிவிக் கார் எர்த் ட்ரீம்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் இந்தளவுக்கு மைலேஜ் தருவதாக ஹோண்டா தெரிவிக்கிறது. சிவிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.
நம் நாட்டு மார்க்கெட்டில் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்ததால் படுமோசமான விற்பனையை சிவிக் பதிவு செய்து வந்தது. இதனால், இதன் விற்பனையை சமீபத்தில் ஹோண்டா நிறுத்தியது. இந்தநிலையில், பிரிட்டனில் டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்படுவதால் மீண்டும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் சிவிக் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








