குறைந்த விலையில் சிட்டியின் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்

ஹோண்டா சிட்டி
விற்பனை நிறுத்தப்பட்ட மிட் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட சிட்டி காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா.

வரவேற்பு இல்லாததால் சி்ட்டியின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட எஸ் வேரியண்ட்டின் விற்பனையை ஹோண்டா நிறுத்தியது. இநத் நிலையில், ஆட்டோமேட்டிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது.

எனவே, எஸ் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் சிட்டியை மீண்டும் விற்பனைக்கு விட்டுள்ளது ஹோண்டா. தற்போது சிட்டியின் வி டாப் வேரியண்ட்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் கிடைக்கிறது. இந்த நிலையில், அதைவிட குறைவான விலையில் புதிய எஸ் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் சிட்டி மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

இதன்மூலம், சிட்டியின் விற்பனை ஓரளவு அதிகரிக்க முடியும் என்று ஹோண்டா நம்புகிறது. முக்கிய மாநகரங்களில் சிட்டியின் புதிய ஆட்டோமேட்டிக் எஸ் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த புதிய சிட்டி காரின் வேரியண்ட் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

116.3 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் சிட்டியின் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 16.8 கிமீ செல்வதாக ஹோண்டா தெரிவித்துள்ள நிலையில், புதிய ஆட்டோமேட்டிக் மாடல் இன்னும் குறைவான மைலேஜை மட்டுமே தரும் என்று கருதப்படுகிறது. ரூ.9.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் சிட்டியின் எஸ் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 16, 2012, 17:10 [IST]
English summary
Honda cars has launched new automatic variant of City at INR 9.10 lakhs. The new city will boost the honda sales and give tough competition to rivals.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+