புதிய மினி எஸ்யூவியின் டீஸரை வெளியிட்ட ஹோண்டா
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புத்தம் புதிய மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஹோண்டா பார்வைக்கு வைக்கிறது. இந்த புதிய மினி எஸ்யூவியின் டீஸரை தற்போது ஹோண்டா வெளியிட்டிருக்கிறது. புதிய ஜாஸ் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி அடுத்த 2 ஆண்டுகளில் உற்பத்தி நிலையை எட்டிவிடும்.
மேலும், உள்நாட்டு மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு புதிய மாடல்களை உருவாக்கிக் கொள்ளலாம் என பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் நிபுணர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை பச்சை கொடி காட்டி விட்டது. எனவே, அந்தந்த நாடுகளின் மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட உள்ளது.



Click it and Unblock the Notifications








