இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை அமைக்கும் ஹோண்டா

Amaze
ராஜஸ்தானில் டீசல் எஞ்சின் தயாரிப்புக்காக புதிய ஆலையை நிர்மாணிக்க உள்ளது ஹோண்டா கார் நிறுவனம்.

பெட்ரோல் கார்களை மட்டும் வைத்து மார்க்கெட்டில் கரைசேர முடியாது என்பதை தாமதமாக உணர்ந்த ஹோண்டா அவசரமாக புதிய டீசல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. அமேஸ் என்ற பெயரில் வரும் இந்த புதிய காரில் ஹோண்டாவின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

இந்த நிலையில், ஒரே ஒரு டீசல் காரை மட்டும் வைத்துக்கொண்டால் மார்க்கெட் பங்களிப்பை உயர்த்த முடியாது என்பதால் அடுத்தடுத்து புதிய டீசல் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ராஜஸ்தானில் புதிய டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலையை ஹோண்டா அமைக்கிறது. இதனை ஹோண்டாவின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிய எஞ்சின் ஆலை அமைக்கப்பட இருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய டீசல் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. அமேஸ் செடான் காருக்கு அடுத்து டீசல் சிட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதன்மூலம், தற்போது துவண்டு போயிருக்கும் ஹோண்டாவின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாக உயர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2012, 10:43 [IST]
English summary
Honda will be setting up a diesel engine plant in Rajasthan as it prepares to launch its first diesel car in India.The Honda Amaze diesel will be get a 1.5-litre i-DTEC diesel engine developed using Honda's 'Earth Dreams' diesel technology.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+