டீசல் எஞ்சினுடன் புதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்

ஐரோப்பிய மார்க்கெட்டில் டீசல் எஞ்சினுடன் புதிய சிஆர்வி எஸ்யூவியை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டாவின் பிரபலமான சிஆர்வி எஸ்யூவி தற்போது வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய சிஆர்வி எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Honda CR-V

கடந்த ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் சிஆர்வி இந்தியா வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டில் 2.2லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சினுடன் சிஆர்வி எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. இருப்பினும், அடுத்த ஆண்டு புதிய 1.6 லிட்டர் எஞ்சினை சிஆர்வியில் பொருத்தி ஐரோப்பிய மார்க்கெட்டில் வி்ற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் ஹோண்டாவிடம் உள்ளது.

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதேபோன்று, பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய சிஆர்வி எஸ்யூவி இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்படும்போது அது நிச்சயம் டொயோட்டா பார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவிக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 21, 2012, 16:16 [IST]
English summary
Honda has unveiled the all new CRV crossover in Europe. The most notable changes in the new CRV is the availability of the i-DTEC diesel engine along with the familiar i-VTEC petrol engine. Honda is also planning to add a more fuel efficient 1.6-litre diesel engine by 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+