கார்களுக்கு ரூ.1.20 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய்!
முதன்முறையாக டீசல் ஐ20 மற்றும் வெர்னா உள்பட அனைத்து கார்களுக்கும் சேமிப்பு சலுகையை அறிவித்துள்ளது ஹூண்டாய். ரூ.15,000 முதல் ரூ.1.20 லட்சம் மதிப்புடைய சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கார் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கமான நிலையை கருத்தில்க்கொண்டே இந்த சலுகைகைகளை ஹூண்டாய் வழங்குகிறது.

இயான்
இயான் வாங்குவோர் ரூ.29,250 வரை சேமிப்பு சலுகையை பெற முடியும்.

ஹூண்டாய் வழங்கும் சேமிப்பு சலுகை
சான்ட்ரோ காருக்கு ரூ.45,050 மதிப்புடையை சேமிப்பு சலுகையை பெறலாம்.

ஐ 10
ஐ-10 காருக்கு ரூ.53,000 வரை தள்ளுபடி சலுகையை பெறலாம்.

ஐ 20
முதன்முறையாக டீசல் ஐ20 காருக்கு தள்ளுபடி வழங்குகிறது. ஹூண்டாய். பெட்ரோல் மாடலுக்கு ரூ.37,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.15,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆக்ஸென்ட்
ஆக்ஸென்ட் கார் வாங்குவோர் ரூ.40,700 வரை தள்ளுபடி பெறலாம்.

வெர்னா
பெட்ரோல் மற்றும் டீசல் வெர்னாவுக்கு ரூ.25,000 வரையில் தள்ளுபடி வழங்குகிறது ஹூண்டாய்.

எலன்ட்ரா
எலன்ட்ரா வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை சேமிக்க முடியும்.

சொனாட்டா
சொனாட்டா வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.76,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

சான்டா பீ
சான்டா பீ பிரிமியம் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரையிலான சேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது ஹூண்டாய்.


Click it and Unblock the Notifications








