காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய ஐ10: ஹூண்டாய் அறிமுகம்

2013 Hyundai i 10
வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடிய புதிய ஐ10 காரை ஐரோப்பிய மார்க்கெட்டில் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது.

2013 ஐ10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரில் முகப்பு கிரில், விண்டோ ஃபிரேம், ஹெட்லைட் ஆகியவை கருப்பு முலாம் பூச்சுடன் மாற்றப்பட்டுள்ளது. இதனால், புதிய ஐ10 இன்னும் கவர்ச்சியாக மாறியிருக்கிறது. அதேவேளை, தற்போதைய மாடலுக்கும் புதிய மாடலுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை.

எஞ்சினை பொறுத்தவரையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், புதிய ஐ10 கார் இன்னும் ஓரிரு மாதங்களில் நம் நாட்டு மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சந்தை போட்டி நிறைந்த மார்க்கெட்டுகளில் இந்த புதிய ஐ10 காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, முற்றிலும் புதிய மாடல் ஐ 10 காரை 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய். அடுத்த ஆண்டு பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் புதிய 2014 மாடல் ஐ10 காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், 2014 மாடல் ஐ10 கார் இந்தியாவில் டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 24, 2012, 11:09 [IST]
English summary
South Korean auto giant Hyundai motors has introduced upgraded 2013 i 10 car in European car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+