ஐ20 பிளாட்பார்மில் புதிய செடான் காரை களமிறக்கும் ஹூண்டாய்

காம்பெக்ட் செடான் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்ட மாருதி டிசையருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாதத்திற்கு சராசரியாக 10,000 டிசையர் கார்கள் விற்பனையாகின்றன.
இதனால், அனைத்து நிறுவனங்களும் டிசையர் மார்க்கெட்டை உடைக்கும் நோக்கில் புதிய காம்பெக்ட் செடான் கார்களை களமிறக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஹோண்டா, டாடாவை தொடர்ந்து தற்போது ஹூண்டாயும் இந்த மார்க்கெட்டில் புதிய காரை களமிறக்கும் பணிகளை விரைவுப்படுத்தியிருக்கிறது.
ஐ20 பிளாட்பார்மில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடானை ஹூண்டாய் வடிவமைத்து வருகிறது. ஹூண்டாயின் வெற்றிகரமான ஐ20 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் இந்த கார் அடுத்த ஆண்டு இறுதியில் மார்க்கெட்டுக்கு வருகிறது.
ஐ20 காரை விட ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை குறைவான விலையில் புதிய காம்பெக்ட் செடானை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. அக்ஸென்ட் காருக்கு மாற்றாக இந்த புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், 2016ம் ஆண்டு வரை அக்ஸென்ட் விற்பனையை நிறுத்தும் திட்டமில்லை என ஹூண்டாய் கூறி உள்ளது. இதனால், அக்ஸென்ட் மற்றும் வெர்னா கார்களுக்கு இடையிலான மார்க்கெட்டில் இந்த புதிய செடான் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








