புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்

ரூ.12.5 லட்சம் ஆரம்ப விலையில் புத்தம் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா காரை டெல்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.

2012 Elantra

கடந்த 2007ம் ஆண்டு எலன்ட்ரா செடான் காரின் விற்பனையை ஹூண்டாய் நிறுத்தியது. இந்த நிலையில், ப்ளூயிடிக் டிசைனில் புதிய எலன்ட்ரா காரை ஹூண்டாய் வடிவமைத்தது.

படு கவர்ச்சியான தோற்றம் கொண்ட புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இன்று புதிய எலன்ட்ரா காரை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.

149.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா விற்பனைக்கு வந்துள்ளது.

6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் எலன்ட்ரா கிடைக்கும். கறுப்பு, சில்வர், வெள்ளை உள்ளிட்ட ஆறு வண்ணங்களில் புதிய எலன்ட்ராவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், கோகோ பிளாக் மற்றும் பியேஜ் இரட்டை வண்ண இன்டிரியருடன் எலன்ட்ரா கிடைக்கும்.

குரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை எலன்ட்ராவின் முக்கிய அம்சங்கள். ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எலன்ட்ரா வந்துள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய கீ லெஸ் என்ட்ரி சிஸ்டமும் உள்ளது.

ரூ.25,000 முன்பணத்துடன் ஹூண்டாய் எலன்ட்ராவுக்கு முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

ஹூண்டாய் எலன்ட்ரா விலை விபரம்:

பெட்ரோல்:

எலன்ட்ரா எஸ் : ரூ.12.50 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ் : ரூ.13.74 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ்(ஆட்டோ) : ரூ.14.74 லட்சம்

டீசல்:

எலன்ட்ரா பேஸ் வேரியண்ட் : ரூ.12.91 லட்சம்

எலன்ட்ரா எஸ் : ரூ.13.64 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ் : ரூ.14.85 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ்(ஆட்டோ) : ரூ.15.85 லட்சம்

More from DriveSpark

Article Published On: Monday, August 13, 2012, 13:16 [IST]
English summary
Hyundai has launched the new Fluidic Elantra sedan with a starting price of Rs. 12.51 lakhs. The new Elantra is a completely different package when compared with the previous Elantra that was being sold here. Hyundai opened bookings of the new Elantra fully confident of its performance in the market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+