எலகட்ரிக் ரேஸ் காரை உருவாக்கிய மும்பை ஐஐடி மாணவர்கள்

இவோ-1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் காரை தயாரிக்க ரூ.15 லட்சம் செலவாகியுள்ளது. மும்பை தொழில்நுட்ப கழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த 60 மாணவர்கள் ஒருங்கிணைந்து இந்த காரை வடிவமைத்துள்ளனர்.
இவோ1 எலக்ட்ரிக் ரேஸ் காரில் 32 கேவி திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 35 கிமீ தூரம் வரை இந்த கார் செல்லும்.
மேலும், இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தினால் ரூ.12 லட்சத்தில் தயாரிக்க முடியும் என்று இந்த கான்செப்ட் கார் திட்டக் குழு மேலாளர்களில் ஒருவரான பிரதீக் ஷர்மா கூறினார். இந்தியாவின் முதல் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ரேஸ் கார் கான்செப்ட் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு மேம்படுத்திய அம்சங்களுடன் கூடிய இவோ2 எலக்ட்ரிக் ரேஸ் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக பிரதீக் ஷர்மா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








