டாடா பெருமையுடன் வழங்கும் புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி: பிரத்யேக படங்கள் விபரங்கள்
டுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் விபரங்களை லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது.
ஆடம்பர எஸ்யூவி என்றாலே அனைவரின் கண்முன் வருவது பிரிட்டிஷ் நிறுவனமான லேண்ட்ரோவரின் தயாரிப்புகள்தான். கால மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் ரசனை மாறி வருவதால், தனது தயாரிப்புகளை அவ்வப்போது வடிவமைப்பு, வசதிகள் என அனைத்திலும் மாற்றங்களை செய்து லேண்ட்ரோவர் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தனது ரேஞ்ச்ரோவர் வரிசையில் அடுத்த தலைமுறை அம்சங்களுடன் எம்கே4 என்ற புதிய ஆடம்பர எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய ஆடம்பர எஸ்யூவி இலகு எடை கொண்டதாக இருக்கும். அத்தோடு, சொகுசு வசதிகள், கையாளுமை என அனைத்திலும் ரேஞ்ச்ரோவரின் பெயரை பரைசாற்றும் விதமாக இருக்கும்.
ஆர்ம்ரெஸ்ட், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சொகுசான இருக்கைள் என அசத்தும் புதிய ரேஞ்ச்ரோவரின் டிரைவர் காக்பிட்
இந்த புதிய ரேஞ்ச்ரோவரின் ஹைபிரிட் மாடலில் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். லித்தியம் அயான் பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் ரேஞ்ச்ரோவருக்கு பவர் கொடுக்கும். இநத் எஸ்யூவியில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பபட்டிருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 4.4 லிட்டர் டிடி வி8 டீசல் எஞ்சின் மாடல்களில் 8 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். வரும் டிசம்பர் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ரேஞ்ச்ரோவர் 170 மார்க்கெட்டுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பு
நான்காம் தலைமுறை ரேஞ்ச்ரோவரின் அசத்தலான முன்புற வடிவமைப்பு

பெர்ஃபார்மென்ஸ்
தண்ணீரில் மீன் நீந்துவதை போல பாலைவன மணலில் அனாயசமாக சீறிச் செல்லும் காட்சி

முகப்பு
நான்காம் தலைமுறை ரேஞ்ச்ரோவரின் அசத்தலான முன்புற வடிவமைப்பு

பெர்ஃபார்மென்ஸ்
தண்ணீரில் மீன் நீந்துவதை போல பாலைவன மணலில் அனாயசமாக சீறிச் செல்லும் காட்சி

பின்புற இருக்கை
தனி ஏசி வென்ட்டுகள், ஆர்ம்ரெஸ்ட், ஹெட்ரெஸ்ட்டுடன் அதிக சொகுசை வழங்கும் இருக்கைகள்

ஆஃப்ரோடில் எப்பூடி?
கரடு முரடான சாலையில் எத்தனிக்கும் புதிய ரேஞ்ச்ரோவர்

டிரைவர் காக்பிட்
ஆர்ம்ரெஸ்ட், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சொகுசான இருக்கைள் என அசத்தும் புதிய ரேஞ்ச்ரோவரின் டிரைவர் காக்பிட்


Click it and Unblock the Notifications








