டாடா சஃபாரியை ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியாக மாற்றும் அதிசயம்
டாடா சஃபாரியை ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி போன்று மாற்றிக் காட்டி அசத்தியுள்ளது டெல்லியை சேர்ந்த பிக் டாடி என்ற கஸ்டமைசேஷன் நிறுவனம்.
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் எவோக். சினிமா நட்சத்திரங்கள் முதல் தொழிலதிபர்கள் அனைவரின் கனவு கார்களில் ஒன்றாக திகழ்கிறது எவோக் எஸ்யூவி. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், டாடா சஃபாரி எஸ்யூவியை ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி போன்று கஸ்டமைஸ் செய்து மாற்றிக் காட்டியுள்ளது பிக் டாடி என்ற நிறுவனம். மூன்ரோவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட சஃபாரியை பார்த்தவுடன் பெரிய எவோக் எஸ்யூவியா என்று கூறும் அளவுக்கு அச்சு அசலாக மாற்றிப்பட்டுள்ளது.
இதுபோன்று மாற்றித் தருவதற்கு 2.5 லட்சம் செலவாகும் என பிக் டாடி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி ரூ.52 லட்சம் முதல் ரூ.67 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், புதிய டாடா சஃபாரியை வாங்கி இதுபோன்று மாற்றினால் மொத்தமாக ரூ.18 லட்சம் ஆகும் என்கிறது பிக் டாடி. பழைய சஃபாரியை வாங்கி கொடுத்தால் கூட இதேபோன்று கஸ்டமைஸ் செய்து தருவதாக பிக் டாடி கூறுகிறது. ஆனால், டாடா சஃபாரியை கஸ்டமைஸ் செய்வதற்கு 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என்று பிக் டாடி தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








