பொருளாதார சரிவு: ஹைபிரிட் சூப்பர் கார் திட்டத்தை கைவிட்ட ஜாகுவார்
உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையற்ற நிலையை கருத்தில்க்கொண்டு தனது அதிவேக சூப்பர் கார் திட்டத்தை கைவிடுவதாக ஜாகுவார் அறிவித்துள்ளது. சி-எக்ஸ் 75 என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஹைபிரிட் காரின் கான்செப்ட் மாடல் 2010ம் ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
வில்லியம்ஸ் பார்முலா-1 ரேஸிங் அணியுடன் இணைந்து இந்த காரை ஜாகுவார் வடிவமைத்தது. இந்த காரை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 30 வல்லுனர்கள் 5 மாதிரி மாடல்களையும் வடிவமைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், "உலக பொருளாதாரத்தின் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையில் இந்த கார் திட்டத்துக்கு அதிக அளவில் முதலீடு செய்வது சரியான முடிவாக இருக்காது," என்று ஜாகுவார் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் ஆர்வம்
காரை வாங்குவதற்கு தகுதிவாய்ந்த 100 வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஜாகுவாரின் அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுதத்தியிருக்கிறது.

ஹைபிரிட் கார்
1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

வியக்க வைக்கும் உந்துசக்தி
வெறும் 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் படைத்தது இந்த ஹைபிரிட் கார்.

உற்பத்தி இலக்கு
மொத்தமாகவே 250 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய டாடாவின் அங்கமான ஜாகுவார் திட்டமிட்டிருந்தது.

விலை
பிரத்யேக வடிவமைப்பு, சிறப்பு வசதிகள் மற்றும் பவர்ஃபுல் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்ட இந்த காரை ரூ.9 கோடி விலையில் விற்பனை செய்ய ஜாகுவார் திட்டம் வைத்திருந்தது.


Click it and Unblock the Notifications








