டாடா ஜாகுவாரின் அதிவேக செடான் கார்: சிறப்பு தகவல்கள்

டாடா ஜாகுவார் நிறுவனத்தின் புதிய பவர்ஃபுல் செடான் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாகுவார் தயாரிப்புகளில் இதுதான் தற்போதைய அதிவேக செடான் கார். டாடாவின் கைக்கு வந்தபின் ஜாகுவார் எஞ்சினியர்களின் தீவிர முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட மாடல்

மேம்படுத்தப்பட்ட மாடல்

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்த புதிய எக்ஸ்எஃப்ஆர்-எஸ்.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

அதிக சக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 550 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

அதிக பவர்

அதிக பவர்

பழைய எக்ஸ்எஃப்ஆர் காரை விட இந்த புதிய காரின் எஞ்சின் 39 பிஎச்பி ஆற்றைல கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

உந்து சக்தி

உந்து சக்தி

வெறும் 4.6 வினாடிகளில் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது. 0-160 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் தொட்டுவிடும்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாதவாறு எஞ்சின் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

'குயிக்ஷிப்ட்' கியர் பாக்ஸ்

'குயிக்ஷிப்ட்' கியர் பாக்ஸ்

இந்த காரில் 'குயிக்ஷிப்ட்' தொழில்நுட்பம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருப்பதால் நகர்ப்புறம் அல்லது நெடுஞ்சாலை எதுவாயினம் சிறந்த பிக்கப்பையும், டிரைவிங் அனுபவத்தையும் தரும்.

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர் காரை விட எக்ஸ்எஃப்ஆர்-எஸ் காரின் சஸ்பென்ஷன் 30 சதவீதம் அதிக உறுதி கொண்டது. தவிர, கூடுதல் ஸ்பிரிங்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் புதிய வீல் பேரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் சிறந்த கையாளுமையை கொடுக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆர்-எஸ் மாடலில் சிவப்பு, நீலம் மற்றும் யானை தந்த வண்ணங்களில் கையால் தைக்கப்பட்ட லெதர் வேலைப்பாடுகள் கவர்ச்சியாக இருக்கின்றன. இந்த காரின் டேஷ்போர்டு அலுமினியம் பினிஷிங்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இலவச ஸ்பாய்லர்கள்

இலவச ஸ்பாய்லர்கள்

இலவசமாக இரண்டு ஸ்பாய்லர்களை இந்த காருக்கு வழங்குகிறது ஜாகுவார்.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

பழைய மாடலைவிட புதிய எக்ஸ்எஃப்ஆர்-எஸ் காரில் 25 மிமீ கூடுதல் அகலம் கொண்ட 20 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எடை

எடை

இந்த காரின் எடை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், எக்ஸ்எஃப்ஆர் போன்றே இந்த கார் 1891 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 5, 2012, 12:37 [IST]
English summary
Jaguar XFR-S has unveiled in Los Angeles motor show. New Jaguar XFR-S gets the 5.0-litre supercharged V8 engine. The Jaguar XFR-S coupe can reach 100kph in 4.4sec.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+