ரூ.1.27 கோடியில் ஸ்பெஷல் எடிசன் சொகுசு கார்: ஜாகுவார் அறிமுகம்
ரூ.1.27 கோடி விலையில் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்கேஆர் சொகுசு செடான் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் பிராண்டின் சொகுசு செடான் கார் எஸ்கேஆர். உலகின் மிக பிரபல சொகுசு கார் மாடல்களில் ஒன்றான இந்த காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை ஜாகுவார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் மாடலில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் கிடைக்கும். இதன் உட்புற பினிஷிங் அனைத்தும் கைவினைஞர்கள் மூலம் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் பேடில் ஷிப்ட் மூலம் கியரை மாற்ற முடியும். ரூ.1.27 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த காரை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








