அவென்டேடார் கன்வெர்ட்டிபிள் மாடல்: லம்போர்கினி அறிமுகம்
லம்போர்கினி நிறுவனத்தின் வெற்றிகரமான சூப்பர் கார் மாடல் அவென்டேடார் எல்பி 700-4. இந்த காரின் அசத்தலான ரோட்ஸ்டெர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனது பிரத்யேக வடிவமைப்பால் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள அவென்டேடாரின் ஓபன்டாப் மாடல் தற்போது அந்த காருக்கு கூடுதல் ரசிகர்களை பெற்றுத்தரும் எனும் வகையில் படுநேர்த்தியான வடிவமைப்பும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் கொண்டதாக வந்திருக்கிறது இந்த சூப்பர் கார்.
கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட இதன் திறந்து மூடும் கூரை இரண்டு பகுதிகளாக இருக்கிறது. ஒரு கூரை வெறும் 6 கிலோ மட்டுமே எடை கொண்டது. தேவையில்லை என்ற பட்சத்தில் கையாலேயே கழற்றி பூட் ரூமில் வைத்துக்கொள்ளலாம். அவென்டேடார் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 690 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. வெறும் 3.0 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது.
மேலும், காரின் உள்ளலங்காரத்தை பொறுத்தவரையில் சில மாற்றங்களை கண்டிருக்கிறது. டூயல் டோன் இன்டிரியர் மற்றும் வெளிர் நீல வண்ணம் கொண்ட மாடலும் கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த லம்போர்கினி கன்வெர்ட்டிபிள் மாடல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விற்பனைக்கு விடப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.2.10 கோடி ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்லைடரில் லம்போ அவென்டேடார் டாப்லெஸ் மாடலின் பிரத்யேக படங்களை இஞ்ச் இஞ்ச்சாக கண்டு ரசியுங்கள்.

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்

லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர்



Click it and Unblock the Notifications








