மைசூர் மஹாராஜாவின் பழமை வாய்ந்த சாரட் வண்டி விரைவில் ஏலம்

மைசூர் மஹாராஜாவுக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாரட் வண்டி வரும் 24ந் தேதி லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.

Mysore Maharaja Coach
கடந்த 1825ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த சாரட் வண்டி குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கலைநுணுக்கம் மிக்க வகையில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்போது மைசூர் அரண்மனையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை ஒத்ததாக இருக்கிறது.

16 ஜன்னல்களுடன் இணைக்கப்பட்டதாக உருவாக்கப்பட்ட இதன் உட்புறத்திலும் அழகான வேலைப்பாடுகளை கொண்டது. வெளிப்புறத்தில் 2 பணியாளர்கள் அமரும் வகையில் இருக்கை வசதியும் கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தை சேர்ந்தவர் வசம் இந்த சாரட் வண்டி இருக்கிறது. இந்த நிலையில், வரும் 24ந் தேதி ஹிஸ்டாரிக்ஸ் என்ற ஏல நிறுவனம் மூலம் லண்டனில் இந்த சாரட் வண்டி ஏலம் விடப்பட உள்ளது. இந்த சாரட் வண்டி ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 13, 2012, 14:59 [IST]
English summary
A state of art coach belonging to the Maharaja of Mysore and dating back to the year 1825 is set to be auctioned in London on November 24, 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+