மேம்படுத்தப்பட்ட புதிய வெரிட்டோ- சிறப்பு பார்வை

டாக்சி மார்க்கெட் முத்திரையிலிருந்து விடுவித்து குடும்ப காராக மாற்றுவதற்காக வடிவமைப்பு, வசதிகளில் பல மாறுதல்களுடன் வெரிட்டோ செடான் காரை களமிறக்கியிருக்கிறது மஹிந்திரா. அதிக இடவசதி, பட்ஜெட் விலையில் செடான் காரை தேர்வு செய்பவர்களின் கவனத்தில் வெரிட்டோவுக்கும் இனி கிடைக்கும். வெரிட்டோவின் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

Mahindra Verito

எஞ்சின்:

பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது. அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

டீசல் மாடலில் அதிக மைலேஜ் வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 ஆகிய இரண்டு மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட ரகங்களில் வாங்கலாம்.

வெளிப்புற வடிவமைப்பு:

வெரிட்டோவின் முகப்பை பார்த்தவுடன் 'வாவ்' சொல்ல வைக்கிறது. பழைய மாடலின் முகப்பின் சுவடு இல்லாமல் மிக நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் புதிய வெரிட்டோவின் முகப்பை மாற்றியுள்ளது மஹிந்திரா. வெற்றி வீரன் எக்ஸ்யூவியின் முன்பக்க கிரில் சாயலுடன் புதிய வெரிட்டோவின் கிரில் மாற்றம் கண்டிருக்கிறது.

பெரிய ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் மற்றும் பாடி கலர் பம்பர் ஆகியவை வெரிட்டோவை புதிய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. முன்பக்க அழகை காட்டி மயங்க வைத்த வெரிட்டோவின் ரியர் வியூ மிரரில் இண்டிகேட்டர் விளக்கு அழகுக்கு அழகு சேர்க்கிறது. பின்புறத்தில் டேஞ்சர் விளக்குகள் மாற்றம் கண்டிருக்கிறது. முன்பு குறுகலாக நீளவாக்கில் இருந்த டேஞ்சர் லைட்டுகள் சற்றே பருத்து எடுப்பாக காட்டுகின்றன. 510 லிட்டர் கொண்ட பூட் ரூம் நீண்ட தூர பயணங்களின்போது பயனுள்ளதாக இருக்கும்.

உட்புற வடிவமைப்பு:

அதிக இடவசதி கொண்ட வெரிட்டோவில் டேஷ்போர்டு புதுமையாக மாறியுள்ளது. வெரிட்டோவின் சென்ட்ரல் கன்சோலின் மேற்புறத்தில் மியூசிக் சிஸ்டம் பெரும்பான்மையான இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. கார்பன் ஃபோர்ஸ் ஸ்டீயரிங் வீல் கொண்டிருப்பதால் ஸ்டைலாகவும், அதிக கிரிப் கொண்டதாகவும் உணர வைக்கிறது.இரட்டை வண்ணம் கொண்ட இருக்கைகள் இதத்தை கொடுக்கிறது.

வுட் பினிஷிங்குடன் கூடிய சென்ட்ரல் கன்சோல், ப்ளஷ் கார்பெட் ஆகியவை வெரிட்டோவுக்கு ரிச் லுக்கை வழங்குகிறது. கண்ணாடிகளை ஏறி இறக்குவதற்கான ஸ்விட்ச் கதவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிளவ் பாக்ஸ் இருக்கும் இடத்திற்கே மேலே பொருட்களை வைப்பதற்கான சிறிய அறை ஒன்றும் இருக்கிறது. சராசரி உயரம் கொண்டவர்களுக்கு ஹெட்ரூம், லெக் ரூம் போதுமானதாக இருக்கிறது. மொத்தத்தில் 5 பேர் அமர்ந்து செல்ல சிறந்த செடான் காராக கூறலாம்.

கூடுதல் அம்சங்கள்:

எலக்ட்ரிக் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர், ஏசி, ஹீட்டர், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் டிரிப் மீட்டர், பேஃப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, டிஜிட்டல் கடிகாரம், வெளிப்புற வெப்பநிலையை காட்டும் டிஜிட்டல் மீட்டர், சிகரெட் லைட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், பின்புற இருக்கையில் ஹெட்ரெஸ்ட், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சீட் பெல்ட்டுகள், சன் வைசர்ஸ், லக்கேஜ் ரூம் கார்ப்பெட் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

மியூசிக் சிஸ்டம்:

பயணங்களை சுகமாக்குவதற்காக மியூசிக் சிஸ்டத்துடன் வெரிட்டோ விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய சிங்கிள் சிடி பிளேயர் பொருத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெரிட்டோவை தேர்வு செய்வதற்கான கூடுதல் காரணமாக இருக்கும்.

பாதுகாப்பு:

புதிய வெரிட்டோ ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருக்கிறது. ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்), டிரைவர் சைடு ஏர்பேக், அன்னியர்களின் அத்துமீறல் மற்றும் திருட்டை காட்டிக் கொடுக்கும் ஆன்ட்டி தெப்ட் தொழில்நுட்பம், அதிர்வுகள் குறைந்த ஸ்டீயரிங் வீல், கீ லெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் ரியர் விண்டோ சைல்டு லாக், பனி விளக்குகள், கதவை திறந்தால் விளக்குகள் ஒளிரும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

மைலேஜ்:

பெட்ரோல் மாடல் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 11.3 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 15.7 கிமீ மைலேஜையும் தரும். டீசல் மாடல் நகர்ப்புறத்தில் 13.8 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 19.2 மைலேஜையும் தரும்.

விலை:

வெரிட்டோ ஜி2(பெட்ரோல்) : ரூ.5.27 லட்சம்

வெரிட்டோ ஜி4(பெட்ரோல்): ரூ.5.49 லட்சம்

வெரிட்டோ டி2(டீசல்) : ரூ.6.26 லட்சம்

வெரிட்டோ டி4(டீசல்) ரூ.6.48 லட்சம்

வெரிட்டோ டி6(டீசல்) : ரூ.7.14 லட்சம்

More from DriveSpark

Article Published On: Monday, July 30, 2012, 9:39 [IST]
English summary

 The Old Verito has been appreciated by many for its space and mileage, but the car has not been able to impress everyone with its looks. Now, You can tick all the the positives in the new Verito and many more as Mahindra has added several new features to the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+