ஆண்டு கடைசி: மஹிந்திரா வழங்கும் அதிரடி தள்ளுபடி சலுகைகள்
வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அதிரடி சலுகைகளை மஹிந்திரா அறிவித்துள்ளது. அதிகம் விற்பனையாகும் பொலிரோ மற்றும் ஸ்கார்ப்பியோ உள்பட அனைத்து கார்களுக்கும் ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

பொலிரோ
மஹிந்திராவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாக இருந்து வரும் பொலிரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெரிட்டோ
புதிய வெரிட்டோ செடான் காருக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்கார்ப்பியோ
பொலிரோ போன்றே அதிகம் விற்பனையாகும் ஸ்கார்ப்பியோ டஸ்ட்டரால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே, ஸ்கார்ப்பியோவுக்கு ரூ.50,000 தள்ளுபடி வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஸைலோ
அதிகபட்சமாக ஸைலோவுக்கு ரூ.70,000 தள்ளுபடி வழங்குகிறது மஹிந்திரா.

சலுகை காலம்
டிசம்பர் 25ந் தேதி வரை இந்த தள்ளுபடி சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


Click it and Unblock the Notifications








