விற்பனைக்கு வந்த டுகாட்டி: போட்டி களத்தில் இறங்கிய மஹிந்திரா

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் பழம்பெருமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமாக திகழ்கிறது. ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி உலகின் எந்த மூலையிலும் டுகாட்டியி்ன் பெயர் பிரபலம். கடந்த 1926ல் துவங்கப்பட்ட டுகாட்டி நிறுவனம் கடந்த 1946ம் ஆண்டு முதல் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
டுகாட்டி நிறுவனம் கூடுதல் முதலீட்டுக்காக பலபேர் கையில் மாறி வருகிறது. இறுதியில் கடந்த 2005ம் ஆண்டு முதல் இத்தாலியை சேர்ந்த பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் மோட்டார்சைக்கிள் நிறுவனமாக திகழும் டுகாட்டி நிறுவனத்தை சர்வதேச போட்டியை சமாளித்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அதிக நிதி தேவைப்படு்கிறது. இதையடுத்து, டுகாட்டியை விற்பனை செய்ய பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டுகாட்டி நிறுவனம் விற்பனை செய்வதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து ஜாம்பாவான் நிறுவனங்களான இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் உள்பட வோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் அந்த நிறுவனத்தை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
ரூ.8,000 கோடி மதிப்பில் டுகாட்டியை விற்பனை செய்ய பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications





























