300 புதிய யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்கும் மஹிந்திரா

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 115 நகரங்களில் 214 யூஸ்டு கார் ஷோரூம்கள் உள்ளன. இந்த நிலையில், மிகப் பெரிய வர்த்தக விரிவாக்கத்தை தற்போது மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் மேற்கொண்டு வருகிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் புதிதாக 50 யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்க உள்ளது மஹிந்திரா. இதைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு மார்ச்சுக்குள் யூஸ்டு கார் ஷோரூம்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் துபே கூறுகையில்," யூஸ்டு கார் மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு தக்கவாறு ஈடுகொடுக்கும் வகையில் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் புதிய ஷோரூம்களை திறக்க உள்ளோம். குறிப்பாக, காஷ்மீரில் புதிதாக 10 யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்க இருக்கிறோம். காஷ்மீரில் நல்ல வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. மாதத்திற்கு 2,500 யூஸ்டு கார்களை விற்பனை செய்து வருகிறோம்.
மேலும், வாரண்டி ஃபர்ஸ்ட் மற்றும் சர்ட்டிஃபர்ஸ்ட் என்ற பெயரில் யூஸ்டு கார்களுக்கான 2 புதிய வாரண்டி திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது எங்களிடம் யூஸ்டு கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மன நிறைவையும், பயனையும் தரும்," என்றார்.


Click it and Unblock the Notifications








