புதிய கார் மற்றும் எஸ்யூவியை வடிவமைக்கும் மஹிந்திரா

சி-101 என்ற பெயரில் காரும், எஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் கிராஸ்ஓவர் ரக எஸ்யூவியையும் வடிவமைக்கப்படுகிறது.
மோனோகாக் சேஸிஸ் கொண்டதாக வடிவமைக்கப்படும் இந்த இரண்டு புதிய கார்களும் தற்போதைய தொழில்நுட்ப தாக்கத்தின் அடிப்படையில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.
ஒரே எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை இந்த இரண்டு கார்களுக்கும் பொருத்தப்பட உள்ளது. இரண்டு கார்களும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும்.
மேலும், இந்த கார்களை தயாரிப்பதற்காக ஆந்திராவில் புதிய ஆலை அமைக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கியிருக்கிறது. புதிய ஆலைக்கு அம்மாநில அரசிடமிருந்து பல்வேறு அனுமதிகளை அந்த நிறுவனம் ஏற்கனவே பெற்றுவிட்டது.
எனவே, விரைவில் புதிய ஆலை அமைப்பதற்கான பணிகளை முறைப்படி துவங்கப்பட உள்ளது. கார் மார்க்கெட்டில் வெரிட்டோ செடானை மட்டும் தற்போது மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. எனவே, வலுவான மார்க்கெட்டை பெறும் விதத்தில் புதிய கார் மாடல்களை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications








