சிஎன்ஜி கியாஸில் இயங்கும் மேக்ஸிமோ: மஹிந்திரா அறிமுகம்
சிஎன்ஜி கியாஸில் இயங்கும் மேக்ஸிமோ மினி டிரக்கை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
வர்த்தக மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா அதிக மைலேஜ் கொடுக்கும் வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மஹிந்திரா வாகனங்களுக்கு வர்த்தக மார்க்கெட்டில் தனி மதிப்பு இருக்கிறது.

இதுவரை டீசல் எஞ்சின்கள் மூலம் நன்மதிப்பை பெற்றிருந்த அந்த நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு உக்ந்த சிஎன்ஜி கியாஸில் இயங்கும் மேக்ஸிமோ மினி டிரக்கை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறைந்த எரிபொருள் செலவுடன், அதிக மைலேஜ் கொடுப்பதுடன் மிக குறைந்த கார்பன் புகையை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதை வெகுவாக தவிர்க்கும் வகையில் இந்த புதிய மினி டிரக் இருக்கும்.
டெல்லி, குஜராத் பகுதிகளில் சிஎன்ஜி நிலையங்கள் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் இந்த புதிய மினி டிரக்குக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.
ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையில் சிஎன்ஜியில் இயங்கும் மேக்ஸிமோ மினி டிரக் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








