எக்ஸ்யூவி 500க்கு புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் அறிமுகம்!
எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர்களின் பயண பரவசத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது மஹிந்திரா. ஆம், எக்ஸ்யூவி 500 டாப் வேரியண்ட் காருக்கான புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புளூசென்ஸ் அப்ளிகேஷன்!
எக்ஸ்யூவியின் டபிள்யூ-8(W8) வேரியண்ட் காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தையும், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் 'புளூசென்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் இணைக்க முடியும்.

பொழுதுபோக்கு வசதிகள்
பொழுதுபோக்கு வசதிகள், வழிகாட்டி மற்றும் இதர வசதிகளை இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்மார்ட்போனிலேயே பெறவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

திருட்டை தவிர்க்கும் வசதி
சாவி இல்லாமல் காரை திறக்க முயன்றால் அதுகுறித்து உரிமையாளரின் ஸ்மார்ட்போனுக்கு உடனடியாக குறுந்தகவல் மூலம் எச்சரிக்கும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் தரும்.

எரிபொருள் கணக்கீடு
எரிபொருள் அளவு மற்றும் டேங்க்கில் இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பன உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும். இதுதவிர, பராமரிப்பு கால அட்டவணை குறித்து நினைவூட்டும் வசதியையும், டயரில் காற்றழுத்தம் குறித்த தகவலையும் இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் பெறலாம்.

இங்கே பதிவிறக்கம் செய்யலாம்!
புதிய வாடிக்கையாளர்கள் தவிர இந்த அப்ளிகேஷனை டபிள்யூ-8 வேரியண்ட் எக்ஸ்யூவி கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பின்வரும் இணைப்பின் மூலம் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://mahindraxuv500.com/product/mobile-downloads.htm


Click it and Unblock the Notifications








