ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக வந்த மஹிந்திரா குவான்ட்டோ: விபரங்கள்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குவான்ட்டோ காரை ரூ.5.82 லட்சத்தில் மஹிந்திரா சற்றுமுன் அறிமுகம் செய்தது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த காரில் 7 பேர் பயணம் செய்யலாம். தினசரி அலுவலக பயன்பாடு, நீண்ட தூர பயணம், அதிக மைலேஜ் கொடுக்கும் எஞ்சின் என பன்முக அம்சங்களோடு வந்திருக்கும் புதிய குவான்ட்டோ காரின் பிரத்யேக படங்கள், விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா குவான்ட்டோ வேரியண்ட் விபரம்
சி2,சி4, சி6 மற்ரும் சி8 ஆகிய 4 வேரியண்ட்களில் புதிய குவான்ட்டோ விற்பனைக்கு கிடைக்கும். 4 மீட்டருக்கும் குறைவான இந்த காரில் 2+3+2 என்ற இருக்கை வசதியுடன் வந்திருப்பதால் 7 பேர் பயணம் செய்ய முடியும்.

எஞ்சின்
ஹேட்ச்பேக் கார்களை ஒப்பிடும்போது 250 கிலோ கூடுதல் எடையை கொண்டிருக்கும் இந்த காரில் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

குவான்ட்டோ பவர்
பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களாக கருதப்படும் ஃபியட் புன்ட்டோ, ஹூண்டாய் ஐ20 ஆகியவை அதிகபட்சம் 90 பிஎச்பி ஆற்றல் வரை வெளிப்படுத்தும் நிலையில், ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக வந்திருக்கும் புதிய குவான்ட்டோவின் எஞ்சின் 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
டாப் வேரியண்ட்டில் 2 காற்றுப் பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பார்க் அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கும்.

மைலேஜ், விலை விபரம்
அராய் சான்றுபடி இந்த கார் லிட்டருக்கு 17.1 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மஹாராஷ்டிராவில் ரூ.5.82 லட்சம் முதல் ரூ.7.36 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
Images source: Team BHP


Click it and Unblock the Notifications








