சென்னையில் சாங்யாங் ரெக்ஸ்டன் அறிமுகம்: விலை விபரம்

கடந்த மாதம் இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூர் உள்பட 7 பெருநகரங்களில் சாங்யாங் ரெக்ஸ்டன் நேற்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் சவாலான விலையில் வந்திருக்கும் ரெக்ஸ்டன் எஸ்யூவியில் 2.7 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 165 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
மொத்தம் 2 வேரியண்ட்களில் ரெக்ஸ்டன் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், டாப் வேரியண்ட் 5 ஸ்பீட் இடிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.
சென்னை எக்ஸ்ஷோரூம் விலை:
ஆர்எக்ஸ்-5 பேஸ் வேரியண்ட்: ரூ.18.08 லட்சம்
ஆர்எக்ஸ்-7 டாப் வேரியண்ட் : ரூ.20.12 லட்சம்


Click it and Unblock the Notifications








