அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்த மஹிந்திரா முயற்சி?

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலம் உலகெங்கிலும் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் தனக்கென தனி இடத்தை பெற்று வைத்துள்ளது.
இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் விற்பனைக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் 64 விழுக்காடு பங்குகளை குவைத் நாட்டை சேர்ந்த இன்வெஸ்ட்மென்ட் தார் கோ., நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் பங்குகளை தார் கோ., நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விற்பனையை வெற்றிகரமாக முடித்து தருவதற்கு ரோத்சைல்டு என்ற நிறுவனத்தை தார் கோ., நிறுவனம் நியமித்திருக்கிறது.
ரோத்சைல்டு நிறுவனம் அஸ்டன் மார்ட்டின் பங்குகளை கையகப்படுத்துவதற்கு தகுதியான முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் ஒன்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 2008ல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய உலக புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. தற்போது இரு நிறுவனங்களும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருக்கின்றன. இதேமுறையில், தற்போது அஸ்டன் மார்ட்டின் பிராண்டை கையகப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா இறங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








