மஹிந்திரா குவான்ட்டோ: படங்களுடன் கூடுதல் அம்சங்கள் ஒரு பார்வை
ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களுக்கு போட்டியாக வந்திருக்கும் மஹிந்திரா குவான்ட்டோ 6 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் குவான்ட்டோவை பவர்ஃபுல் காம்பெக்ட் எஸ்யூவியாக கூறலாம். இந்த புதிய காரில் வழக்கம்போல் மஹிந்திரா ஏராளமான கூடுதல் அம்சங்களுடன் களமிறக்கி இருக்கிறது.
குறிப்பாக, மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் கியரை நியூட்ரலில் வைக்கும்போது 2.5 வினாடிகளி்ல் எஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும். கிளட்சில் கால் வைத்தால் மீண்டும் எஞ்சின் ஆன் ஆகிவிடும். இன்னும் பிற வசதிகள் மற்றும் அம்சங்களை குவான்ட்டோ கொண்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், பார்க்கிங் இடப்பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அலாய் வீல்கள், பனி விளக்குகள், அசத்தலான முகப்பு, பின்புறம் புதிய வடிவமைப்பு என வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்து விடும்.

வசதிகள்
முன்பக்க இருக்கைக்கு பின்புறம் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட டிரே பொருத்தப்பட்டுள்ளது. பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதுதவிர, பின்புற இருக்கைக்கு கீழேயும் கைக்கடிகாரம், ஆவணங்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் இடவசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்ட்ரல் கன்சோலில் மொபைல் சார்ஜரும் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
டிரைவர் மற்றும் முன் இருக்கை பயணிக்கு டூவல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஏபிஎஸ் பிரேக் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் குவான்ட்டோவில் உள்ளது. 2 டின் ஆடியோ சிஸ்டம் பயணத்தை இனிதாக்கும்.

ஸ்டைல்...
மேற்கூரை மீது இருபுற விளிம்பிலும் பொருத்தப்பட்டிருக்கும் ரூப் ரெயில் ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகிறது. ஸ்டெப்னி டயர் வைப்பதற்கு ஸ்டைலான கவர் கொடுக்கப்பட்டிருப்பது குவான்ட்டோவுக்கு கூடுதல் அழகு.

பிற வசதிகள்
டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். முன் வரிசை இருக்கைகளுக்கு தனித் தனி ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தேவையில்லையெனில் மடக்கி வைத்துக் கொள்ளலாம். கியர் லிவருக்கு அருகில் 2 தண்ணீர் பாட்டில்களை வைக்கும் வசதி உள்ளது.


Click it and Unblock the Notifications








