4 வீல் டிரைவ் மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்

உற்பத்தி நெருக்கடி காரணமாக 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு நீண்ட காலமாக முன்பதிவை நிறுத்தி வைத்திருந்தது மஹி்ந்திரா. இந்த நிலையில், எக்ஸ்யூவியின் உற்பத்தி திறனை மாதத்திற்கு 5,000 என்ற அளவில் உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா.
இதையடுத்து, கடந்த செப்டம்பரில் எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் திறக்கப்பட்டது. ஆனால், கியர்பாக்ஸ் சூடாவதாக எழுந்த புகாரையடுத்து உடனடியாக 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு வரும் நிலையில், 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவை திறந்துள்ளது மஹிந்திரா.
8 வாரங்கள் முதல் 10 வாரங்கள் வரையிலான காத்திருப்பு காலத்துடன் மஹி்நதிரா எக்ஸ்யூவிக்கு முன் செய்யப்படுகிறது. ரூ.40,000 முன்பணமாக செலுத்தி 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








