மஹிந்திரா எக்ஸ்யூவி 500: வேரியண்ட்கள் ஒப்பீட்டு பார்வை

XUV 500
மார்க்கெட்டில் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவிக்கு தனி மரியாதை இருக்கிறது. தகுந்த விலை, அதிக வசதிகள், அசத்தலான வடிவமைப்பு என அனைத்து விதத்திலும் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இந்த எக்ஸ்யூவி 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எந்தெந்த வேரியன்ட்டில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். அதற்கு முன் விலை விபரங்களை பார்க்கலாம். கடந்த ஆண்டு எக்ஸ்யூவி 500வின் டபிள்யூ6(W6)பேஸ் வேரியன்ட் ரூ.10.65 லட்சத்திலும், டபிள்யூ8(W8) 2 வீல் டிரைவ் ரூ.11.95 லட்சத்திலும், டபிள்யூ8(W8) ஆல் வீல் டிரைவ் வேரியன்ட் ரூ.12.99 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை ஒரு லட்ச ரூபாய் எக்ஸ்யூவி விலை ஏறியுள்ளது. விலை ஏறினாலும், பிற கார்களை ஒப்பிடுகையில், தற்போதும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பான காராகத்தான் இருக்கிறது எக்ஸ்யூவி 500. வேரியண்ட்களில் இருக்கும் வித்தியாசங்களை காணலாம்.

தோற்றம்:

தோற்றத்தில் இரண்டு வேரியண்ட்களும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், டாப் வேரியண்ட்டான டபிள்யூ 8ல் அலாய் வீல் கூடுதலாக இருக்கிறது. வேண்டுமானால் அலாய் வீல்களை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அலாய் வீல்கள் ரூ.24,000 விலையில் தனியாக கிடைக்கிறது. மேலும், இரண்டு விதமான அலாய் வீல் மாடல்கள் கிடைக்கிறது. ஒன்று டபிள்யூ 8ல் உள்ளது போன்றும் மற்றொன்று கருப்பு முலாம் பூசப்பட்ட சற்று ஸ்போர்ட்டியான லுக் கொண்டதாகவும் இருக்கிறது.

உட்புறம்:

டபிள்யூ8ஐ உட்புறத்தை விட சற்று டல்லான தோற்றத்தை கொண்டிருக்கிறது டபிள்யூ 6. டபிள்யூ8ல் லெதர் இருக்கைகளும், டபிள்யூ 6 வேரியன்ட்டில் பேப்ரிக் இருக்கைளும் இருக்கின்றன. மேலும், டபிள்யூ 8ல் கலர் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டமும், டபிள்யூ6ல் மோனோக்ரோம் டிஸ்ப்ளேவும் இருக்கிறது.

சொகுசு மற்றும் வசதிகள்:

இரண்டு வேரியன்ட்களிலும் போதுமான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இருப்பினும், டபிள்யூ 8 சில கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. டபிள்யூ 8 வேரியன்ட் 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது. ஆனால், டபிள்யூ 6 வேரியன்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே இருக்கின்றன.

டபிள்யூ8ல் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்துடன் கலர் டிஸ்ப்ளே இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இஎஸ்பி தொழில்நுட்பமும், ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பமும் இருக்கிறது. முக்கிய பாதுகாப்பு அம்சங்களான இவை இரண்டும் டபிள்யூ6 பேஸ் வேரியன்ட்டில் மிஸ்ஸிங்.

பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனி விளக்குகள் ஆகியவை இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ் மற்றும் கையாளுமை:

இரண்டு வேரியண்ட்களிலுமே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்யூவி பெர்ஃபார்மென்சில் குறை வைக்காது. சஸ்பென்ஷனும் சிறப்பாக இருக்கிறது.

டபிள்யூ8 வேரியண்ட்டில்தான் ரோல் ஓவர் மிட்டிகேஷன் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் வாகனத்தை கவிழ விடாமல் பாதுகாக்கும். இதனால், டபிள்யூ8 வேரியண்ட் சிறந்த கையாளுமையை கொண்டதாகவும் இருக்கிறது டபிள்யூ8.

பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் வேண்டுமென்போர் தேர்வு செய்ய 2 வீல் டிரைவ் கொண்ட டபிள்யூ8 வேரியண்ட் சிறந்தது. அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செல்வோருக்கும் இந்த 2 வீல் டிரைவ் டபிள்யூ8 டாப் வேரியண்ட்தான் நல்லது.

நடுத்தர ஆப் ரோடு சாகசங்களை செய்ய விரும்புவர்களுக்கு ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் பெஸ்ட் சாய்ஸ். எக்ஸ்யூவி 500தான் என் கனவு; ஆனால், பட்ஜெட் கொஞ்சம் கம்மி என்பவர்கள் டபிள்யூ6 பேஸ் வேரியண்ட்டுக்கு செல்வது உத்தமம். ஏனெனனில் டபிள்யூ8ஐ விட டபிள்யூ 6 வேரியண்ட் ரூ.1.60 லட்சம் விலை குறைவானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 4, 2012, 10:32 [IST]
English summary
To create the next generation of SUVs, you have to advance past the status quo. Probably that's why the XUV500 lets you discover features that most other cars have yet to. But within the XUV500 list of variants, between the W6 and the W8, which variant suits a buyer’s needs more? Here’s a look at the two.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+