மஹிந்திரா ஸைலோவுக்கு 'மாஸ்டர் பிராண்ட்' விருது!
இந்திய தயாரிப்பு பிரிவில் மஹிந்திரா ஸைலோவுக்கு மதிப்புமிக்க 2012-13ம் ஆண்டுக்கான 'மாஸ்டர் பிராண்ட்' விருது கிடைத்துள்ளது. 'சிஎம்ஓ ஏசியா' என்ற அமைப்பு இந்த விருதை வழங்கியிருக்கிறது. மார்க்கெட்டில் ஆதிக்கம், நிலைத்தன்மை, கவர்ச்சி,வாடிக்கையாளர் மத்தியில் நிலையான மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த விருதுக்கு கார் மாடல்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், அனைத்திலும் ஸைலோ விருது கமிட்டியின் திருப்தியை பெற்று விருதை தட்டிச் சென்றது.

ஸ்டைல்
எம்பிவி மார்க்கெட்டில் ஸ்டைலான கார் என்ற பெயரை ஸைலோ தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

வசீகர முகப்பு
புதிய கிரில், கவர்ச்சியான டிசைன் கொண்ட ஹெட்லைட் ஆகியைவை ஸைலோவின் முகப்புக்கு கூடுதல் வசீகரத்தை தருகிறது.

எம்பிவிக்கு இதுதானே முக்கியம்
3 வரிசையிலும் தாராள இடவசதியை கொண்ட கார் ஸைலோ. 8 பேர் வரை பயணம் செய்யலாம்.

நவீன வசதிகள்
ஏராளமான சிறப்பு வசதிகள், ஏபிஎஸ், ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது ஸைலோ. வாய்ஸ் கன்ட்ரோல் வசதி ஸைலோவின் குறிப்பிடத்தக்க வசதி.

எஞ்சின்
மஹிந்திராவின் நம்பகத்தன்மையுடன் நல்ல பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அதிக மைலேஜ் தரும் 2.5 லிட்டர் எம்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

விலை
அம்சங்களை பொறுத்து மொத்தம் 13 வேரியண்ட்களில் கிடைக்கும் ஸைலோ ரூ.7.47 லட்சம் முதல் ரூ.10.55 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








