வால்வோவுக்கு போட்டியாக வரும் 'மேன்' சொகுசு பஸ்!

டிரக் மற்றும் டிப்பர் லாரி தயாரிப்பில் தற்போது மேன் நிறுவனம் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் சொகுசு பஸ் மார்க்கெட்டிலும் மேன் நிறுவனம் களமிறங்குகிறது.
மேன் அறிமுகப்படுத்தும் சொகுசு பஸ் பின்புற எஞ்சின் கொண்டதாக இருக்கும் என்பதால் முன்புற எஞ்சின் கொண்ட பஸ்களை விட 25 விழுக்காடு கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். தவிர, மேன் தற்போது விற்பனை செய்து வரும் முன்புற எஞ்சின் பொருத்தப்பட்ட ஏரோபஸ் மாடலை அதிக பவர்ஃபுல் எஞ்சின் கொண்டதாக இருக்கும்.
இதுதவிர, பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் ஏராளமான அம்சங்களுடன் இந்த பஸ்சை அறிமுகப்படுத்த உள்ளது மேன் நிறுவனம். தற்போது இந்த பஸ்சின் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முற்பகுதியில் இந்த புதிய பஸ் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








