ஜனவரி முதல் கார் விலையை ரூ.20,000 வரை உயர்த்தும் மாருதி

ஆல்ட்டோ கே10
ஜனவரி முதல் அனைத்து கார்களின் விலையையும் ரூ.20,000 வரை உயர்த்துகிறது மாருதி.

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் விலையை அவ்வப்போது கார் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்தநிலையில், ரூபாயின் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்களால் மாருதி வருவாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி.

இதுகுறித்து மாருதியின் சிஓஓ மாயங்க் பரீக் கூறியதாவது:

"ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை தவிர்க்க கார் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்த இருக்கிறோம். அதிகபட்சம் ரூ.20,000 வரை விலை உயர்வு இருக்கும். எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு உயர்வு இருக்கும் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்," என்றார்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மாருதியின் நிகர லாபம் 5.41 விழுக்காடு குறைந்தது. இதேபோன்று, 3-வது காலாண்டிலும் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வரும் நிலையிலும், நிகர லாபத்தில் சரிவு ஏற்படும் நிலை இருக்கிறது. இதை தவிர்க்கவே விலை உயர்வு ஆயுதத்தை மாருதி கையிலெடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 6, 2012, 13:46 [IST]
English summary
Maruti today said it will increase the prices of its vehicles across all models by up to Rs. 20,000 from January.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+