ரூ.4.52 லட்சத்தில் புதிய மாருதி ரிட்ஸின் பெட்ரோல் மாடல் அறிமுகம்

ரிட்ஸ்
டீசல் மாடலில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரிட்ஸின் பெட்ரோல் மாடலும் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.4.52 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பெட்ரோல் ரிட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கடந்த மாதம் புதிய ரிட்ஸ் காரை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ரிட்ஸ் டீசல் மாடலில் மட்டும் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய ரிட்ஸ் காரின் பெட்ரோல் மாடலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கும் ரிட்ஸ் டீசல் காரில் இருக்கும் டீசல் ரிட்ஸில் இருக்கும் அதே அம்சங்களை கொண்டிருக்கிறது.

டாப் வேரியண்ட்டில் ஏர்பேக்குகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், அலாய் வீல் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக கிடைக்கும்.

எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.4.52 லட்சத்திலும், விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.4.83 லட்சத்திலும், இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட் ரூ.5.49 லட்சத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது. டீசல் மாடலை விட ரூ.80,000 குறைவான ஆரம்ப விலையில் புதிய பெட்ரோல் ரிட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 23, 2012, 10:53 [IST]
English summary
Maruti Suzuki has silently launched refreshed petrol variants of the Ritz at INR 4.52 lakhs . The refreshed new Ritz petrol boasts of the same technological advancements that were first seen in the new Swift launched early last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+