இன்னும் ஓரிரு நாளில் அறிமுகமாகிறது ஆட்டோமேட்டிக் ரிட்ஸ்

ரிட்ஸ்
இன்னும் ஓரிரு நாளில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட ரிட்ஸ் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

நம் நாட்டு வாடிக்கையாளர்களின் கவனம் மெல்ல ஆட்டோமேட்டிக் கார்களின் பக்கமும் திரும்பியிருக்கிறது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரியோ ஹேட்ச்பேக் காரின் ஆட்டோமேட்டிக் மாடலை சமீபத்தில் ஹோண்டா அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அடுத்து ரிட்ஸ் காரின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை மாருதி விரைவில் களமிறக்குகிறது.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கும் இந்த ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் 83 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட ரிட்ஸ் அராய் சான்றுபடி லிட்டருக்கு 18.5 கிமீ செல்வதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் காரின் விபரங்களை மாருதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் முறைப்படி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படாதநிலையில், பெட்ரோல் மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டைவிட ரூ.52,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 8, 2012, 11:41 [IST]
English summary
Maruti Suzuki has unveiled its website of the Ritz to include information on a new automatic variant. This means that the company is sure to officially launch the Ritz automatic within the next few days.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+