ஹோண்டா அமேஸ் வருகையால் புதிய டிசையரை களமிறக்கும் மாருதி

மாருதி டிசையர்
அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய டிசையர் மாடலை மாருதி அறிமுகப்படுத்துகிறது.

என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. இதனால், மார்க்கெட் லீடர் மாருதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் பிரியோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட புதிய அமேஸ் செடான் காரை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் டீசல் மாடலிலும் வருவது மாருதி டிசையருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமேஸ் வருகையை சமாளிக்கும் வகையில், புதிய டிசையரில் பல மாற்றங்களை செய்ய மாருதி முடிவெடுத்துள்ளது. முக்கியமாக உட்புறத்தில் அதிக இடவசதியை தருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், அதிக பொருட்களை வைப்பதற்கு வசதியாக மடக்கி விரிக்கும் வசதிகொண்ட பின் இருக்கைகளுடன் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதுதவிர, முகப்பு கிரில் மற்றும் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைனில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளன.

அதேவேளை, எஞ்சின்களில் எந்த மாற்றமும் இருக்காது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த புதிய டிசையர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மாருதி உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 18, 2012, 13:25 [IST]
English summary
Country's leading car maker Maruti suzuki is preparing to launch a facelifted Dzire compact sedan by Diwali next year in a bid to take on the Honda Amaze which should be in the market by April.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+