புதிய எஸ்எக்ஸ்-4 செடானை களமிறக்கும் மாருதி!

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் எஸ்எக்ஸ்-4 செடான் மாருதிக்கு நல்ல பங்களிப்பை வழங்கி வந்தது. அடுத்தடுத்து களமிறங்கிய புதிய மாடல்களால் எஸ்எக்ஸ்-4 சந்தை போட்டியிலிருந்து விலகிவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கு எஸ்எக்ஸ்-4 கார் புதுப்பொலிவு பெறுகிறது.
ஹெட்லைட், கிரில், டெயில் லைட் ஆகியவை மாற்றம் காண்கிறது. மேலும், பின்புறம் கிசாஷியை போன்ற தோற்றத்துடன் மிடுக்காக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
உட்புறத்தில் டேஷ்போர்டு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, டாப் என்ட் மாடலில் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக இடம்பெறுகிறது.
அதேவேளை, விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத வகையில் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. எஞ்சின்களில் மாற்றம் இருக்காது.


Click it and Unblock the Notifications








