ஸ்பெஷல் எடிசன் ஆல்ட்டோ கே10: மாருதி அறிமுகம்
பிரத்யேக கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஆல்ட்டோ கே10 காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.
ஆல்ட்டோ கே10 நைட்ரேஸர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஆல்ட்டோ எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

வெளிப்புறம் கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்களை கொண்டிருப்பதால் அழகு சேர்க்கிறது. ரியர் என்ட் ஸ்பாய்லர், வீல் கவர், ஃபேப்ரிக் சீட் கவர்கள் உள்பட 11 கூடுதல் ஆக்சஸெரீகளுடன் புதிய ஆல்ட்டோ கே10 கிடைக்கும்.
ஸ்பெஷல் எடிசன் ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.13,490 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.3.34 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரும் விலையில் புதிய ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








