டஸ்ட்டர் மார்க்கெட்டை உடைக்க வருகிறது மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ஏ ஆல்ஃபா என்ற பெயரில் கான்செப்ட் மாடல் மினி எஸ்யூவியை மாருதி பார்வைக்கு வைத்திருந்தது.
பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மினி எஸ்யூவியை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை மாருதி செய்து வருகிறது.
இந்த நிலையில், 2014ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச கண்காட்சியில் இந்த புதிய மினி எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடலை மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருவதால் இந்த புதிய மினி எஸ்யூவியை சவாலான விலையில் களமிறக்க மாருதி முடிவு செய்துள்ளது.
அதாவது, ஸ்விப்ட் ஹேட்ச்பேக் காரை விட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த புதிய மினி எஸ்யூவி 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.
எர்டிகாவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் அல்லது ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும். டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








