புதிய ரிட்ஸ் முக்கிய அம்சங்கள்: படங்களுடன் ஒரு பார்வை
"ஸ்விப்ட் கிடைக்கலையா கவலைய விடுங்க, அதான் ரிட்ஸ் இருக்குல்ல," என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வடிவமைப்பு, எஞ்சின் என அனைத்து விதங்களிலும் ரிட்ஸ் நற்பெயரை வாங்கி வைத்திருக்கிறது. இதை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக வடிவமைப்பில் பல புதிய மாற்றங்களுடன் புதிய ரிட்ஸ் காரை டீசல் மாடலில் மட்டும் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
வெளிப்புறம், உட்புறம் என ஆங்காங்கே 52 புதிய மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய ரிட்ஸ் டீசல் முதன்முறையாக இசட்டிஐ டாப் வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரிட்ஸ் காரின் வெளிப்புறம், உட்புறம், பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து தகவல்களையும் படங்களுடன் ஸ்லைடரில் காணலாம்.
படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில வசதிகள் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். புதிய ரிட்ஸ் பேஸ் வேரியண்ட் ரூ.5.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய இசட்டிஐ டாப் வேரியண்ட் கார் ரூ.6.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

முன்புற வடிவமைப்பு
புன்னைகை பூக்கும் இதழ்கள் போல் பெரிதாகியிருக்கும் முகப்பு கிரில் ரிட்ஸுக்கு புதிய அழகை கொடுக்கிறது. ஹெட்லைட், பனி விளக்குகளும் மாற்றங்களை சந்தித்துள்ளன.

டால் பாய் கான்செப்ட்
டால் பாய் கான்செப்ட் மூலம் அதிக ஹெட்ரூம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய ரிட்ஸ் ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி காற்றின் வேகத்தை எளிதாக கிழித்துச் செல்லும் வகையில் வெளிப்புற வடிவமைப்பை கொண்டிருக்கிறது

உட்புற அம்சங்கள்
டூவல் டோன் கலரி்ல இருக்கைகள் கவர்ந்திழுக்கும் வகையிலும், அதிக சொகுசாகவும் இருக்கி்ன்றன. அனைத்து இருக்கைகளிலும் ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருக்கை மட்டுமல்லாது காரின் உட்புறம் முழுவதும் இரட்டை வண்ணங்களில் அசத்துகிறது. டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். அருவி போன்ற வடிவமைப்பு கொண்ட சென்ட்ரல் கன்சோலின் இறக்கத்தில் கியர் லிவர் பொருத்தப்பட்டிருக்கிறது. அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் உண்டு.

வசதிகள்
குரோம் பூச்சுடன் கூடிய சென்ட்ரல் கன்சோலில் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளது. 3 ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் உள்ளன. யுஎஸ்பி வசதியுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி ஆகியவை உள்ளன. சென்ட்ரல் கன்சோலில் பட்டன்கள் வெகு நேர்த்தியாக காட்சி தருவதுடன் இயக்குவதற்கும் எளிதாக இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள்:
புதிய ரிட்ஸ் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்களில் ஒன்று டிரைவர் மற்றும் முன்வரிசை பயணியின் பாதுகாப்புக்காக டூவல் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தவிர, ஏபிஎஸ் பிரேக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications








