800சிசி டீசல் எஞ்சினுடன் ஓம்னியை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்?

சிறிய கார்களுக்காக 2 சிலிண்டர்கள் கொண்ட 800 சிசி டீசல் எஞ்சினை மாருதி வடிவமைத்து வருகிறது.
அதிக மைலேஜ், குறைந்த கார்பன் புகை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் ஒத்துப் போகும் வகையில் இந்த புதிய எஞ்சின் உருவாக்கப்படுகிறது.
ஆல்ட்டோ, வேகன்-ஆர் உள்ளிட்ட கார்களில் இந்த புதிய டீசல் எஞ்சினை பொருத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதுதவிர, புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் மினி டிரக்கிலும் இந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், ஓம்னி மினி வேனிலும், ஈக்கோ காரிலும் இந்த புதிய டீசல் எஞ்சினை பொருத்த மாருதி திட்டமிட்டுள்ளது.
அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சினுடன் ஓம்னி மற்றும் ஈக்கோ மினி வேன்கள் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








