மாருதி எர்டிகாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த குடும்ப கார் விருது
2012ம் ஆண்டின் சிறந்த குடும்ப கார் விருதை மாருதி எர்டிகா பெற்றுள்ளது. பிரபல பிபிசி டாப்கியர் இந்தியா ஆட்டோமொபைல் இதழ் இந்த விருதை வழங்கியிருக்கிறது. இந்தியஆட்டோமொபைல் கூட்டமைப்பின்(சியாம்) தலைவர் சாண்டில்யாவிடம் இருந்து இந்த மதிப்பு மிக்க விருதை மாருதியின் எஞ்சினியரிங் பிரிவு இயக்குனர் சிவி.ராமன் பெற்றுக்கொண்டார்.
கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த எர்டிகா வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கார் மாடலாக மாறியிருக்கிறது. மேலும், சிறிய கார் மார்க்கெட்டில் மட்டும் கோலோய்ச்சி வந்த மாருதி தற்போது யுட்டிலிட்டி மார்க்கெட்டிலும் நல்ல விற்பனை வளர்ச்சியை பெறுவதற்கு எர்டிகா முக்கிய காரணமாகியிருக்கிறது.

வடிவமைப்பு
ரிட்ஸ் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட எர்டிகா பெரும் வரவேற்பை பெறுவதற்கு சிறப்பான வடிவமைப்பும் முக்கிய காரணம்.

பெட்ரோல் எஞ்சின்
93 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 1.4 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டீசல் மாடல்
நம் நாட்டு மார்க்கெட்டில் ஒரு டஜன் கார்களுக்கு மேல் உயிர்கொடுத்து வரும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் எர்டிகாவிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இருக்கை வசதி
2+3+2 என்ற இருக்கை வரிசை கொண்ட எர்டிகாவில் 7 பேர் பயணம் செய்யலாம்.

டாப் என்ட் மாடலுக்கு கிராக்கி
எர்டிகாவின் டாப் என்ட் மாடலுக்குத்தான் அதிக முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால், டாப் என்ட் மாடலின் வெயிட்டிங் பீரியட் அதிகமாக உள்ளது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20..7 கிமீ மைலைஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது

வசதிகள்
இரண்டாவது வரிசையில் தனி ஏசி வென்ட்டுகள், பவர் விண்டோஸ் உள்ளிட்ட பல வசதிகள் எர்டிகாவில் உண்டு. டாப் என்ட் மாடலில் அலாய் வீல் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கிடைக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 2 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்ட்ர்

விலை
பெட்ரோல் மாடல் ரூ.5.89 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.7.30 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








