பி கிளாஸ் கார் அறிமுகம்: விழாவில் பென்ஸ் நடத்திய கூத்து!

சொகுசு கார் மார்க்கெட்டில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் பென்ஸ் நெருக்கடியில் உள்ளது. இதனால், மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்த தனது பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை இந்திய மார்க்கெட்டில் இறக்க முடிவு செய்தது.
குறைந்த விலை பென்ஸ் காராக வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பி கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை சற்றுமுன் அறிமுகப்படுத்தியது பென்ஸ்.
டெல்லி அருகே நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த விழாவில் பி கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவில் பென்ஸ் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஹொனேக் உள்ளிட்ட அதிகாரிகள், நடிகை ஜெனிலியா ஆகியோவர் கலந்துகொண்டனர்.
பி கிளாஸ் தற்போது அறிமுகம் செய்யப்பட்டாலும் வரும் அக்டோபரில்தான் விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்ய்பபட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், விழாவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பென்ஸ் பி கிளாஸ் கார் இடது பக்க டிரைவிங் கொண்டதாக இருந்தது.
மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தவே அவசர கோலத்தில் இந்த புதிய காரை அவசர அவசரமாக பென்ஸ் அறிமுகப்படுத்தியிருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








