மேம்படுத்தப்பட்ட எம்-கிளாஸ் எஸ்யூவியை அறிமுகம் செய்த பென்ஸ்
மேம்படுத்தப்பட்ட 2012 மாடல் புதிய எம்-கிளாஸ் பிரிமியம் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் எம் கிளாஸ் எஸ்யூவி பிரிமியம் ரகத்தில் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. வாட்டசாட்டமான உருவம், ஏராளமான வசதிகள் என அசத்தும் எம்-கிளாஸ் எஸ்யூவியில் இடப் பிரச்னை வாடிக்கையாளர்களால் குறையாக சொல்லப்பட்டு வந்தது.
இதனை தற்போது அழகாக சரிசெய்துள்ளது பென்ஸ். புதிய எம் கிளாஸ் எஸ்யூவியின் உட்புறம் தற்போது தாராள இடவசதியை கொண்டுள்ளது. மேலும், உட்புறத்தின் பெரும்பாலான பகுதிகள் மர வேலைப்பாடுகளால் அழகுற காட்சியளிக்கிறது.
மேற்கூரையில் சன் ரூஃப் கொண்டுள்ளதால் பயணத்தின் போது ஓர் புதிய அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.புதிய பென்ஸ் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் 258 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
அனைத்து அம்சங்களிலும் குறைவில்லாத இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி ரூ.59.6 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









