ஆர் கிளாஸ் எம்பிவி காரை அறிமுகப்படுத்தி மெர்சிடிஸ் பென்ஸ்

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்ட பென்ஸ் மீண்டும் முதலிடத்தை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தனது பிரிமியம் எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது பென்ஸ்.
ஏராளமான தொழில்நுட்ப வசதிகள், தாராள இடம், எஸ்யூவி போன்ற பாதுகாப்பான உணர்வை தரும் கட்டமைப்பு, ஏர்சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்திருக்கிறது புதிய ஆர் கிளாஸ் எம்பிவி கார். டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரில் 2987சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
7 ஜி டிரோனிக் 4 வீல் டிரைவ் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த எம்பிவி கார் டிரைவிங்கில் புதிய அனுபவத்தை தரும் என்கிறது பென்ஸ். மேலும், இந்த கார் லிட்டருக்கு 11.25 கிமீ மைலேஜ் தரும் என்றும் சான்று கூறுகிறது.
இந்த காரில் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் 633 லிட்டர் கொள்ளவு கொண்டது. ஆனால், இருக்கையை மடக்கினால் 2385 லிட்டர் வரை கொள்ளளவை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த காரில் 7 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
டெல்லியில் இந்த புதிய எம்பிவி கார் ரூ.58.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








