ஸ்போர்ட்ஸ் எடிசன் கார்களை அறிமுகப்படுத்திய பென்ஸ்

கூடுதல் அம்சங்களுடன் சி கிளாஸ் மற்றும் இ கிளாஸ் பிரிமியம் செடான் கார்களை பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டு சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் பென்ஸ் நிறுவனத்தின் சி கிளாஸ் மற்றும் இ கிளாஸ் பிரிமியம் செடான் கார்களும் இடம் பெற்று இருக்கின்றன. இதுவரை 16,000க்கும் மேற்பட்ட சி கிளாஸ் கார்களும், 21,000 மேற்பட்ட இ கிளாஸ் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன.

இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் பார்முலா-1 ஒன் கார் பந்தயங்கள் நடைபெற இருப்பதையடுத்து, ரேஸ் ரசிகர்களை கவரும் விதமாக கூடுதல் அம்சங்களுடன் ஸ்போர்ட்ஸ் எடிசன் சி கிளாஸ் மற்றும் இ கிளாஸ் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பென்ஸ்.

சொகுசு கார் வாங்கும் இளம் தலைமுறை வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதை கருத்திக் கொண்டும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.

Mercedes C-Class & E-Class Sport Editions

ஸ்போர்ட்ஸ் எடிசன் சி கிளாஸ், இ கிளாஸ் கார்களின் சிறப்பம்சங்கள்:

ஏஎம்ஜியின் பிரத்யேக பாடி ஸ்டைலிங்குடன் இரு கார்களும் வந்திருக்கின்றன. இதனால், பார்வைக்கு கூடுதல் கவர்ச்சி தெரிகிறது. சி கிளாஸ் காரில் 17 இஞ்ச் 5 ட்வின் ஸ்போக் அலாய் வீல்களும், இ கிளாஸ் காரில் 18 இஞ்ச் லைட் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இரு கார்களும் பனி வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பகல் நேர ரன்னிங் விளக்குகளும் கூடுதல் கவர்ச்சி. கருப்பு வண்ண பியானோ அப்ஹோல்ஸ்டரியும் உட்புறத்தின் அந்தஸ்தை வெகுவாக உயர்த்துகிறது.

தெர்மேட்டிக் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சிங்கிள் சிடி பிளேயர், டயர்களில் காற்றின் அழுத்தத்தை தெரிவிக்கும் கருவி, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி என ஏராளமான அம்சங்களை அடுக்கும் அளவுக்கு ஸ்போர்ட்ஸ் எடிசன் கார்களை பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பிரேக் அசிஸ்ட், எரிபொருள் சிக்கனத்துக்கான ஈக்கோ ஸ்டார்ட் ஸ்டாப் ஆகியவையும் இருக்கின்றன. இதுதவிர, ஸ்போர்ட்ஸ் எடிசன் கார்களாக தனித்துவப்படுத்தும் விதத்தில் பேட்ஜ்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இரு கார் மாடல்களிலும் 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2143சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சி கிளாஸ் ரூ.29.9 லட்சத்திலும், இ கிளாஸ் ரூ.39.9 லட்சத்திலும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 6, 2012, 13:17 [IST]
English summary
Mercedes-Benz India has launched a Sport Edition of its flagship sedans the C-Class and the E-Class. The Sport Edition of the C-Class 220 CDI and the E-Class 220 CDI Sport Edition has been launched keeping in mind the Indian Grand Prix fever which is soon going to grip the nation . The Sport Edition of the C-Class and the E-Class have an aggressive design language of Mercedes-Benz.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+