ரிப்பேரான பென்ஸ் கார்: கடுப்பில் கழுதைகளை கட்டி இழுத்த தொழிலதிபர்

அடிக்கடி ரிப்பேர் ஆன பென்ஸ் காரை தொழிலதிபர் ஒருவர் கழுதைகளை கட்டி தெருவாய் தெருவாய் இழுத்துபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம், வதோதராவை சேர்ந்த தொழிலதிபர் குமுத் பாட்டீல். கடந்த ஆண்டு ஜூலையில் புதிய பென்ஸ் இ-கிளாஸ் சொகுசு செடான் காரை வாங்கினார். இரண்டு மாதங்கள் அந்த கார் எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் ஓடியது. ஆனால், செப்டம்பர் முதல் அவரது பென்ஸ் கார் அடிக்கடி பழுதானது.

பென்ஸ் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு சென்று சர்வீஸ் செய்வதும், பின்னர் பழுதாவதுமாக இருந்ததே தவிர காரின் பிரச்னை சரியாக வில்லை. 60 லட்ச ரூபாய் கொடுத்து ஆசை ஆசையாய் வாங்கிய கார் அடிக்கடி பழுதானதோடு, அதனை முறையாக பழுது நீக்கித் தராததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் பாட்டீல். இதையடுத்து, நூதன முறையில் தயாரிப்பாளரின் கவனத்தையும், டீலரின் கவனத்தையும் ஈர்க்க முடிவு செய்தார்.

இதற்காக, தனது காரில் 6 கழுதைகளை கட்டி அந்த சொகுசு காரை தெருவாய் தெருவாய் இழுத்துச் சென்றார். இதனால், அந்த கார் சென்ற சாலைகளில் எல்லாம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நூதன போராட்டத்திற்கு பிறகாவது தனது கார் பிரச்னை தீர்ந்துவிடுமா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார் பாட்டீல்.

இதுபோன்று ரிப்பேரான ரேஞ்ச்ரோவர் காரை சீனாவை சேர்ந்த ஒருவர் கழுதையை கட்டி இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காரை சீன தொழிலதிபர் ஒருவர் கூலி ஆட்களை வைத்து நடுரோட்டில் உடைத்ச சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

பென்ஸ் இ-கிளாஸுக்கு வந்த சோதனை

பென்ஸ் இ-கிளாஸுக்கு வந்த சோதனை

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

பென்ஸ் இ-கிளாஸ்

Most Read Articles
English summary
Kumud Patel, a Vadodara based businessman did when his Mercedes-Benz E-Class which he bought In July 2011 posed several problems within months of him purchasing it. Mr Patel has said his E-Class started developing problems in September 2011 and he got them rectified at the Mercedes-Benz service centre.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X