சவாலான விலையில் புதிய பி கிளாஸ்: பென்ஸ் அறிமுகம்

ரூ.21.49 லட்சம் என்ற கடும் சவாலான விலையில் புதிய பென்ஸ் பி கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது.

இந்த புதிய பென்ஸ் கார் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பி கிளாஸ் பி 180 வேரியண்ட் ரூ.21.49 லட்சத்திலும், பி 180 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.24.87 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும். இந்த கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

பி கிளாஸ்
இந்த காருக்கான புக்கிங் இன்று முறையாக திறக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே டீலர்களில் புக்கிங் பெறப்பட்டிருக்கிறது. இதுவரை 250 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளன. புக்கிங் செய்யப்பட்ட கார்கள் வரும் நவம்பருக்குள் டெலிவிரி கொடுக்கப்படும் என பென்ஸ் தெரிவித்துள்ளது.

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பென்ஸ் காரில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 7ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

புளுடூத் வசதியுடன் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 7 காற்றுப் பைகள், டிஸ்க் பிரேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.

இ ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பமும் எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும். இந்த கார் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

பை ஸினான் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் கண்ணாடி கூரை உள்ளிட்ட கூடுதல் சிறப்பு அம்சங்களையும் இந்த புதிய பென்ஸ் கார் கொண்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz India has launched its new B-Class Sports Tourer with a price tag of Rs.21.49 lakhs. This will mean the new B-Class is the German premium carmaker's cheapest car in India.
Story first published: Tuesday, September 18, 2012, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X