தென் இந்தியாவின் முதல் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்த மினி!

ஸ்டைலுக்கும், பெர்ஃபார்மென்சுக்கும் உலக அளவில் பெயர் பெற்றவை மினி பிராண்டு கார்கள். பிஎம்டபிள்யூ கீழ் இயங்கும் மினி கார் நிறுவனம் இந்திய மார்க்கெட் வர்த்தகத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது.
டெல்லியில் முதல் கார் ஷோரூமை திறந்த மினி நிறுவனம் தற்போது தென் இந்திய மார்க்கெட்டிலும் களமிறங்கியுள்ளது. கார் டீலர்ஷிப்பில் சிறந்து விளங்கும் குன் மோட்டார்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் இந்த புதிய மினி பிராண்டு கார்களுக்கான ஷோரூமை திறந்துள்ளது.
இந்த புதிய ஷோரூமில் 4 கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கார்களுக்கான ஆக்சஸெரீஸ் மற்றும் பைனான்ஸ் உள்ளிட்ட இதர சேவைகளையும் இந்த ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மினி கூப்பர், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள், மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ஆகிய கார் மாடல்கள் இங்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








