உஷ்ணம் தாங்காமல் செடான் மார்க்கெட்டிலிருந்து விலகும் மிட்சுபிஷி

Mitsubishi sedan
இந்தியாவில் செடான் கார்கள் விற்பனையை நிறுத்துவதற்கு மிட்சுபிஷி முடிவு செய்துள்ளது. எஸ்யூவி மார்க்கெட்டில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

ராலி ரேஸ் பந்தயங்களில் மிட்சுபிஷியின் சிடியா மற்றும் லான்சர் கார்கள் வெகு பிரபலம். இந்த நிலையில், செடான் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் சிடியா மற்றும் லான்சர் கார்களின் விற்பனை வெகுவாக குறைந்தது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வெறும் 69 சிடியா கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

இதையடுத்து, சிடியா மற்றும் லான்சர் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதற்கு மிட்சுபிஷி முடிவு செய்துள்ளது. டீலர்களில் ஸ்டாக் இருக்கும் கார்களை மட்டும் விற்பனை செய்து செடான் கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் மூடுவிழா நடத்துகிறது மிட்சுபிஷி.

மேலும், பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்த இருப்பதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. எஸ்யூவி மார்க்கெட்டை பலப்படுத்திய பின் செடான் கார் மார்க்கெட்டில் மீண்டும் இறங்குவது குறித்து பரிசீலிக்க இருப்பதாக மிட்சுபிஷி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 26, 2012, 15:50 [IST]
English summary
Mitsubishi, the Japanese carmaker renowned all over the world for its rallying exploits has decided to stop selling sedans in India. Mitsubishi currently sells Lancer and the Cedia sedans and its SUVs are Outlander, Pajero, Pajero Sport and Montero. The company, according to reports will now focus only on the SUV portfolio in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+